தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்ற 11 பேர் சிக்கினர்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் அந்தந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 11 பேர் போலீசில் சிக்கினர். அவர்களை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story