டாக்டரின் மனைவிக்கு செல்போனில் தொந்தரவு; ரியல் எஸ்டேட் அதிபர் கைது


டாக்டரின் மனைவிக்கு செல்போனில் தொந்தரவு; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x

டாக்டரின் மனைவிக்கு செல்போனில் தொந்தரவு கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவியின் செல்போன் எண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் செல்போனில் அழைத்து தொந்தரவு செய்து வந்தார். தினமும் மிஸ்டு கால் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து டாக்டரின் மனைவி, சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, டாக்டரின் மனைவிக்கு செல்போனில் தொந்தரவு செய்தது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகத்தை சேர்ந்த பூபதி (வயது 36) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story