செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

ஈரோடு

அம்மாபேட்டை

பவானி- மேட்டூர் மெயின்ரோட்டில் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னுசாமி, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையின்போது லாரியில் செம்மண் இருந்ததை கண்டனர். இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளக்காபாளையம் அருகே உள்ள ஒசவக்காடு பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 37) என்பதும், அவர் செம்மண்ணை குறிச்சி பகுதியில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியில் கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரியை போலீசார் பறிமுதல் செய்துடன், டிரைவர் முனுசாமியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முனுசாமி கொடுத்த தகவலின் பேரில் செம்மண் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவா மற்றும் ஜெகன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story