பேரிகை அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் சிக்கினார்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திமுகம் அருகே கெரிகேப்பள்ளியில் நரசிம்மப்பா (வயது 43) என்பவர் கஞ்சா செடிகளை தனது தோட்டத்தில் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சோதனை செய்த போது அவர் 3 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த ராகவா (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story