ஏரியூர் அருகே தொழிலாளியை தாக்கிய கணவன்- மனைவி கைது


ஏரியூர் அருகே தொழிலாளியை தாக்கிய கணவன்- மனைவி கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஏரியூர்:

ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை அருகே அரகாசனஹள்ளி ஊராட்சி பழையூர் தோப்பு பகுதியை வஜ்ரவேல் மகன் காரி (வயது 36) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் கோவிந்தன் (41) என்பவருக்கும் வழிப்பாதை குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே காரி தனது மோட்டார் சைக்கிளில் சொந்த நிலத்துக்கு சென்று திரும்பும் போது கோவிந்தன், அவருடைய மனைவி சசிகலா (30) கோவிந்தசாமி (22), திவ்யா (17) ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த காரியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தன், சசிகலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story