மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

தாராபுரத்தில் மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்தில் மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள பழக்கடை முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
உடனே அவர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானா அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
கைது
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டியை சேர்ந்த அமீர் அம்ஜா என்பதும், ரமேசின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.