கோபி அருகே சமையல் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்றவர் கைது


கோபி அருகே சமையல் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்றவர் கைது
x

கோபி அருகே சமையல் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே சமையல் தொழிலாளியை கல்லால் அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

கல்லால் தாக்குதல்

கோபி அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). சமையல் தொழிலாளி. கடந்த 9-ந் தேதி இரவு மாரியப்பன் மதுபோதையில் கோபி குதிரை வண்டி நிறுத்தம் அருகே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கோபி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் (41), மாரியப்பனை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மாரியப்பன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்ததாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேஷ், மாரியப்பனை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

சிறையில் இருந்தவர் கைது

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 11-ந் தேதி மாரியப்பன் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரியப்பன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து கோபி போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அந்த பிரிவின் கீழ் ரமேஷை கைது செய்தனர்.


Next Story