சாராயம் விற்ற 3 பேர் கைது
சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
தலைவாசல்:
ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கருமந்துறை மலைப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டி (61) என்பவர் சாராயம் விற்றது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 58 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் தலைவாசல் அருகே பெரியபுனல்வாசல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்டி, சுரேஷ் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் தலைவாசல் அருகே லத்துவாடி சுவேதி நதிக்கரையில் சாராயம் விற்ற கெங்கவல்லி தாலுகா கடம்பூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story