ஊத்தங்கரையில் கோவிலில் திருடிய 2 பேர் கைது


ஊத்தங்கரையில் கோவிலில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை இந்திரா நகரில் கத்தேரி முனியப்பன் கோவில் உள்ளது. கடந்த 23-ந் தேதி அந்த கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் உண்டியல் பணத்தை திருடியது ஊத்தங்கரை தாலுகா வெங்கடதாம்பட்டி அருகே உள்ள கல்லூரை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 23), வெங்கடதாம்பட்டி பக்தவச்சலம் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 930 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story