பூசாரிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியவர் கைது
பூசாரிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பூசாரிப்பட்டி தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இரவு 11 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த வாலிபரை பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.
பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பண்ணப்பட்டி காங்கேயனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் (23), என்பதும், மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story