சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-பெண் கைது


சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-பெண் கைது
x

சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ரெயில்வே நடைமேடையில் 17 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கிருந்த பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்த சத்யவாணி (வயது 50) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 450 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.



Next Story