தனியார் நிறுவன ஊழியர் கொலை:போலீசார் தேடிய 6 பேர் கைது


தனியார் நிறுவன ஊழியர் கொலை:போலீசார் தேடிய 6 பேர் கைது
x

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் போலீசார் தேடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

சேலம் ஜாகிர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது29). தனியார் நிறுவன ஊழியர். மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கோபிநாதன் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ஏற்பட்ட தகராறில் கோபிநாத் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் தேடி வந்த மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த சரவணன் (47), சக்திவேல் (45), சந்தோஷ் (26), தேவ் என்ற தேவேந்திரன் (25) சிவா என்ற பரமசிவன் (28), சமரசம் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story