சேலத்தில் மொபட் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


சேலத்தில் மொபட் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

சேலத்தில் மொபட் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் கலீல் (வயது 63). இவருடைய வீட்டு முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மொபட் திருட்டு போனது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மொபட் திருடியதாக பச்சப்பட்டியை சேர்ந்த மிதுன்குமார் (20), 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொபட் மீட்கப்பட்டது.


Next Story