சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது


சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது
x

சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி, பழனியப்பா காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 33), ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று சீலநாயக்கன்பட்டி இரட்டைக்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சதீசை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்து 500-யை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ரகுபதி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.



Next Story