தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது
தேன்கனிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டான்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் வசித்து வருபவர் முகமது கவுஸ் (வயது 38). இவர் தனது மோட்டார் சைக்கிளை தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிவறை பகுதியில் நிறுத்தி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை திருட்டு போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள சாப்ராணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவர் மகன் தமிழ்ச்செல்வன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டனர்.