கும்பகோணத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கும்பகோணத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி கொலை
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது40). தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் வையாபுரி தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்த இவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கும்பகோணம் பைராகித்தோப்பை சேர்ந்த தமிழ்வாணன் (23), ஜீவானந்தம் (19), பிரகாஷ் (24), கொற்கையை சேர்ந்த செல்வம் (47) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேடப்பட்டு வந்தவர் கைது
இந்த கொலை வழக்கில் பைராகித்தோப்பை சேர்ந்த கதிரவன் (29) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கும்பகோணம் செட்டி மண்டபம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்ததை பார்த்த கும்பகோணம் தாலுகா போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் புண்ணியமூர்த்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கும்பகோணம், பைராகித்தோப்பை சேர்ந்த கதிரவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.