தூக்குப்போட்டு மாணவி தற்கொலை: பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் 'போக்சோ' சட்டத்தில் கைது
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாணவி தற்கொலை
திருவாரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது அந்த மாணவி புடவையில் தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போக்சோவில் கைது
இதுகுறித்து மாணவியின் தாய் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரில் காட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் தீனதயாளன் (வயது19) தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்து தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர்.