மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து மதுவிற்றவர் கைது


மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து மதுவிற்றவர் கைது
x

மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து மதுவிற்றவர் கைது

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒருவர் மது விற்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனே போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்தவரின் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அதில் 20 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கணம் விளாகம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா ராஜன் (வயது55) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணாராஜனை கைது செய்தனர். 20 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story