நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது


நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில், நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில், நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சோதனை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் போலி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அதன் பேரில் வேதாரண்யம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி மற்றும் அலுவலர்கள் வேதாரண்யம் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது ஆதனூர்-அண்டர்காடு பகுதியில் பையுடன் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

போலி டாக்டர் கைது

அந்த பையில் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப், ஆங்கில மருத்துவ மாத்திரைகள் இருந்தது. இதை தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நெய்விளக்கு கிராமம், தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வேதரத்தினம் (வயது54) என்பதும், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், மேலும் கிளினிக் நடத்தாமல் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதரத்தினத்தை கைது செய்தனர்.


Next Story