செந்தில் பாலாஜி கைது - டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
செந்தில் பாலாஜி கைதுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது. அவரது வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். . தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது பாஜக.
கைது நடவடிக்கைகள் மூலம் பாஜகவால் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.