சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

இதில், வேட்டியம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 33) என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 9 லிட்டர் சாராயம் மற்றும் 250 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story