ஓசூரில்தொழிலாளியை கொலை செய்த நண்பர் கைது
ஓசூர்
ஓசூரில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளிகள்
வேலூர் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). வேலூர் மாவட்டம் அல்லாபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (54). இவர்கள் 2 பேரும் ஓசூர் பேரண்டபள்ளியில், கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வாகனங்களுக்கு பாடி கட்டும் பட்டறையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 13-ந் தேதி மதுகுடித்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புருசோத்தமன், சேகரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். நள்ளிரவு பட்டறைக்கு வந்த கார்த்திக், சேகர், தலையில் பலத்த காயங்களுடன் கிடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.
நண்பர் கைது
இந்த கொலை குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மதுபோதையில் புருஷோத்தமன், இரும்பு கம்பியால் சேகரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய புருஷோத்தமனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.