தேவாரத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
தேவாரத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தெய்வகண்ணன் தலைமையிலான போலீசார், தேவாரம் சின்னதேவி கண்மாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37), சுகேந்திரன் 32) என்பது தெரியவ்நதது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் கவிதா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story