ஓசூர் பகுதியில்குட்கா, கஞ்சா விற்ற 4 பேர் கைது


ஓசூர் பகுதியில்குட்கா, கஞ்சா விற்ற 4 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பகுதியில் குட்கா, கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொத்தகொண்டப்பள்ளி கலிமுதின் (வயது 24), நல்லகானகொத்தப்பள்ளி வெங்கட்ராஜ் (43), செம்பட்டி கிருஷ்ணப்பா (62) ஆகிய 3 பேரும் கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

ஓசூர் டவுன் போலீசார் காந்தி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர் ஓசூர் காந்தி நகரை சேர்ந்த சங்கர் (19) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story