கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற சூளகிரி ராமச்சந்திரன் (வயது35), பர்கூர் லட்சுமணன் (58), சிங்காரப்பேட்டை ஜாவித் (26), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல ஓசூர் சிப்காட் பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற அதுல் (43), ஹட்கோ திம்மராயப்பா (46), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story