ஓசூரில்பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது


ஓசூரில்பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் பிரபல ரவுடி கஜா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தளி கொத்தனூர் பல்லேரிப்பள்ளியை சேர்ந்தவர் கஜா என்கிற கஜேந்திரன் (வயது 35). பிரபல ரவுடி. இவர் மீது ஓசூர் டவுன் போலீசில், கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி, 2020-ல் ஓசூர் தி.மு.க. பிரமுகர் மன்சூர், தளி பெயிண்டிங் காண்டிராக்டர் லோகேஷ் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்குகள், கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் ஓசூர் டவுன், தளி, மத்திகிரி, அட்கோ போலீஸ் நிலையங்களில் இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் போலீசாரின் குற்றபதிவேட்டில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

2 பேர் கைது

இந்த நிலையில், இவரும், ஓசூர் நெசவு தெருவை சேர்ந்த ரவுடி ரோகன் (26) என்பவரும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் அவர்கள் ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருப்பதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கஜா மற்றும் ரோகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான ரவுடி ரோகன் மீது 2020-ல் தி.மு.க. பிரமுகர் மன்சூரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story