அய்யலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
அய்யலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
அய்யலூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், திருச்சி மாவட்டம் விடத்திலாம்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 55), அய்யலூர் அருகே உள்ள கருஞ்சின்னானூரை சேர்ந்த பெருமாள் (46) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள், ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story