கிருஷ்ணகிரி மாவட்டத்தில்பணம் வைத்து சூதாடிய 46 பேர் கைதுகஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 21 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். அதன்படி ஓசூர், மத்திகிரி, பாகலூர், சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பறிமுதல்செய்யப்பட்டது. இதேபோல் வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பர்கூர், கந்திகுப்பம் பாரூர், நாகரசம்பட்டி, ராயக்கேர்டடை, உத்தனப்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி, கஞ்சா
இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கெலமங்கலம் சீனிவாசன் (வயது35), சிங்காரப்பேட்டை ஜாவித் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல கஞ்சா விற்றதாக ஓசூர் வாசவி நகர் குல்லா (20), தளி சாலை சுதர்சன் (23), சிகரலப்பள்ளி கோவிந்தசாமி (40), தம்ம கவுண்டனூர் பவுனம்மாள் (60) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.