Normal
புதுச்சத்திரம் வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது ரூ.1 லட்சம் பறிமுதல்
புதுச்சத்திரம் வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது ரூ.1 லட்சம் பறிமுதல்
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள எடையப்பட்டி ஏரிக்கரை பகுதியில் கடந்த 20-ந் தேதி ஸ்கூட்டரில் சென்ற சரக்கு ஆட்டோ டிரைவரை தாக்கி ரூ.19 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆட்டோ டிரைவர் ஜீவா (வயது 25) நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்துவிட்டு, வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் டிரைவர் ஜீவா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து ரூ.11 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த துறையூரை சேர்ந்த தினகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story