ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது


ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்  வடமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது
x

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாவிலிருந்து மும்பைக்கு, ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்டது. வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியில் அந்த லாரியை, கடந்த 2020-ம் ஆண்டு மர்ம நபர்கள் கடத்தி செல்போன்களை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, 13 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் சவுகான், நியான் சிங், சஞ்சய் மற்றும் பியூரா சவுகான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார், ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story