முதல் மனைவிக்கு தெரியாமல் என்ஜினீயரிங் மாணவியை 2-வது திருமணம் செய்த தச்சு தொழிலாளி கைது


முதல் மனைவிக்கு தெரியாமல்  என்ஜினீயரிங் மாணவியை 2-வது திருமணம் செய்த தச்சு தொழிலாளி கைது
x

முதல் மனைவிக்கு தெரியாமல் என்ஜினீயரிங் மாணவியை 2-வது திருமணம் செய்த தச்சு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமச்சந்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேஷ், சின்ன சூலாமலை பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி சிந்து (21) என்பவரை கடந்த 3-ந் தேதி 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல் மனைவிக்கு தெரியாமல் என்ஜினீயரிங் மாணவியை 2-ம் திருமணம் செய்த சுரேசை கைது செய்தனர்.


Next Story