காவேரிப்பட்டணம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது


காவேரிப்பட்டணம் அருகே  விவசாயி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
x

காவேரிப்பட்டணம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள என்.மோட்டூரை சேர்ந்தவர் நேதாஜி (வயது48). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை, 2 வெள்ளி சங்கிலி ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பண்ணந்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பதும், நேதாஜி வீட்டில் நகையை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story