பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக பஸ்சில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது


பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக  பஸ்சில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்  ஒருவர் கைது
x

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக பஸ்சில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். பஸ்சில், பயணி ஒருவர் டிராவல்ஸ் பையில், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர், பர்கூர் அருகே குட்டைமேடு பகுதியை சேர்ந்த அன்பு என்ற வெங்கடேசன் (வயது 40) என்பதும், பெங்களூருவில் இருந்து பஸ்சில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story