மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது


மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது
x

தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை தாக்கிய தனியார் நிறுவன ஊழியர் கைது

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசகுப்பம் அருகே தனியார் லே அவுட்டை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 39). தனியார் ஏஜென்சியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகவேணி (36). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் நாகவேணியை மல்லேஷ் தாக்கினர். இதை தட்டிக்கேட்ட நாகவேணியின் தம்பி முரளிமோகனின் கையை கடித்தார். இது குறித்து நாகவேணி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேசை கைது செய்தனர்.


Next Story