வீட்டுக்கு தீ வைத்ததாக 4 பேர் கைது


வீட்டுக்கு தீ வைத்ததாக 4 பேர் கைது
x

கோட்டப்பட்டியில் வீட்டுக்கு தீ வைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

அரூர்:

அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பெருமாள் உள்ளிட்ட 7 பேர், சாந்தி மற்றும் அவரது அண்ணன் குட்டதம்பி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் சாந்தியின் வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள், ரூ.40 ஆயிரம் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதுதொடர்பாக சாந்தி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பெருமாள் (வயது 42), ஜெயராஜ் (38), அரவிந்தசாமி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story