கணவன்-மனைவியை தாக்கியவர் கைது


கணவன்-மனைவியை தாக்கியவர் கைது
x

மாடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறில் கணவன்-மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்னால் உள்ள இடத்தில் தனது மாட்டை கட்ட சென்றார். அதற்கு அதேபகுதியை சேர்ந்த சண்முகம் (43) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சண்முகம், சரவணனை தாக்கியதாக தெரிகிறது. இதை தடுக்க வந்த சரவணன் மனைவி விஜயா, மகன் நவீன்குமார் ஆகியோரை சண்முகம் அவரது மகன் தென்னரசு ஆகியோர் கட்டையால் தாக்கினர். இதில் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story