கணினி-மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது


கணினி-மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது
x

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணினி-மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு கணினி, உதிரி பாகங்கள் மற்றும் மின் மோட்டார் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது24) மற்றும் நல்லம்பள்ளி காந்திநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் பள்ளியின் பூட்டை உடைத்து பொருட்களை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கணினி உதிரி பாகங்கள் மற்றும் மின் மோட்டார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story