லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பென்னாகரம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வெள்ளாறு வெல்லம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சண்முகம் (வயது 25). லாரி டிரைவர். கடந்த 2 மாதங்களுக்கு மேட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பென்னாகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதை அறிந்த சண்முகம் சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் சண்முகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.


Next Story