10 வயது சிறுமியை மது குடிக்க வைத்த 6 வாலிபர்கள் கைது
தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்த 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடியோ வைரலாக பரவியது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் வீடியோ வைரலாக பரவியது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
6 பேர் கைது
அதன்பேரில் போலீசார் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சங்கையா (வயது 22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.