கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
x

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன் பேரில் அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பாஞ்சாலியூர் அப்ரீன் (வயது26), திம்மாபுரம் அர்னால்டு (23), ஓசூர் சின்ன எலசகிரி சகிபுல் இஸ்லாம் (23), சூளகிரி சின்னாறு சுனில்குமார் சர்மா (42) ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story