வாலிபரின் கழுத்தை அறுத்த அண்ணன்-தம்பி கைது


வாலிபரின் கழுத்தை அறுத்த அண்ணன்-தம்பி கைது
x

போச்சம்பள்ளி அருகே வாலிபரின் கழுத்தை அறுத்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள கொடமாண்டப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கல்லாவி மேட்டு தெரு காலனியை சேர்ந்தவர்கள் அன்பரசன் (36), கலையரசன் (31). இவர்கள் 2 பேரும் அண்ணன்-தம்பி. இவர்கள் 3 பேரும் உறவினர்கள் ஆவர். குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலையரசன், அன்பரசன் ஆகிய 2 பேரும் மணிகண்டனை கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து அண்ணன் தம்பிகளான அன்பரசன், கலையரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story