போடி, பெரியகுளம் பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது
போடி, பெரியகுளம் பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
போடி தாலுகா போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசுவாசபுரத்தை சேர்ந்த சேர்மலை (வயது 65), சுந்தர்ராஜன் (67), வடமலைராஜபுரத்தை சேர்ந்த நடராஜன் (50), மீ.விலக்கு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (37), நாகலாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (67), மீனாட்சிபுரத்தை சேர்ந்த பால்சாமி (75), இளங்கோவன் (47), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கனகராஜ் (32), சங்கராபுரத்தை சேர்ந்த தங்கமுத்து (46) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து சேர்மலை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பெரியகுளத்தை அடுத்த வைத்தியநாதபுரம் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்றதாக தினேசை (27) பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story