பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது


பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது
x

கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

ஓசூர் பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் 2 பேர் கைகளில் பையுடன் நின்று இருந்தனர். போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தனர். அதில் 27 கிலோ குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அவர்கள் தஞ்சை மாவட்டம் அடம்பை பகுதியை சேர்ந்த பக்ரூத்தின் (வயது31), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த முகமது ரபீக் (53) என்பதும் தெரியவந்தது. இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து பஸ்சில் குட்கா கடத்தி வந்து பின்னர் ஓசூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

கடைகளில் சோதனை

இதேபோல், ஓசூர் நேதாஜி ரோடு ஜங்ஷனில் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாராயண சாத்ரா (42) என்பவர் தனது கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக கடைக்காரர் நாராயண சாத்ராவை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் வைத்திருந்த ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 5½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சூளகுண்டா பகுதியில் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த மணி (43), முத்து (45,) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story