மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தியவர் கைது
பென்னாகரத்தில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி
பென்னாகரம்:
பென்னாகரம் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக துணை சூப்பிரண்டு இமயவரம்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் பருவதனஅள்ளி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பென்னாகரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளியை சேர்ந்த மயில் முருகன் (வயது 36), பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 30 கிலோ குட்கா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story