கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x

மகராஜகடை அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

மகராஜகடை போலீசார் காட்டிநாயனப்பள்ளி இந்திரா காந்தி மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற நபரை பிடித்து போலீசார் சோதனை செய்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கே.பூசாரிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது24) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிள், கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story