ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
x

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கிருஷ்ணகிரி பகுதியில் முகாமிட்டு சோதனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தொடர் அரிசி கடத்தலில் ஈடுபட்ட காரிமங்கலத்தை சேர்ந்த பிலால் (வயது 41) என்பவரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி பரிந்துரைத்தார். இதையடுத்து பிலாலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிலால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story