குட்கா பதுக்கி விற்ற தந்தை-மகன் கைது


குட்கா பதுக்கி விற்ற தந்தை-மகன் கைது
x

தொப்பூர் அருகே குட்கா பதுக்கி விற்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் போலீசார் வெள்ளக்கல் மற்றும் தாதநாய்க்கன்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது தாதநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது56) என்பவரது பேக்கரி கடை மற்றும் அவரது மகன் சந்தோஷ் (30) என்பவருடைய மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து கடைகளில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 கடைகளில் இருந்தும் 25 கிலோ குட்கா, மற்றும் கடத்தலுக்கு பெயன்படுத்திய கார் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.


Next Story