கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது


கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது
x

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா செடி பயிரிட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் ராஜா. விவசாயிகளான இவர்கள் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் தந்தை, மகன் 2 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.


Next Story