பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் பகுதியை சேர்ந்தவர் முரளி. லாரி டிரைவர். இவரது மனைவி குணப்பிரியா (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் முரளிக்கும், அவரது சகோதரர்கள் பசுபதி, சுகனேஷ்வரன்(28) ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இதை ஊர் பிரமுகர்கள் சமாதானம் பேசி தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குணப்பிரியா வீட்டை விட்டு வெளியே வந்த போது, பசுபதி மனைவி பரமேஸ்வரி, சுகனேஸ்வரன், இவரது மனைவி அஞ்சலி ஆகியோர் குணப்பிரியாவை அடித்தும், தகாத வார்த்தையால் பேசியும், வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும் கூறி கழுத்தை பிடித்து கீழே தள்ளி உள்ளனர். இதையடுத்து குணப்பிரியா பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து சுகனேஷ்வரனை கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரி, அஞ்சலி ஆகியோரை தேடி வருகின்றனர்.