சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஜாலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னன் (வயது 67). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 21-ந்தேதி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பொம்மிடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தார்.


Next Story